இது மக்களுக்கான தருணம் – அரசியலுக்கானதல்ல

இது மக்களுக்கான தருணம் – அரசியலுக்கானதல்ல

பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரைக் கோரி நாடாளுமன்றத்தைக் கூட்ட எடுத்த முடிவை நான் மனதார வரவேற்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட்டபோது, கடந்த சில நாட்களாக தமது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும், ஏன் உணவு மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் கூட இழந்த குடும்பங்களைச் சந்தித்தேன்.

இந்தச் சூழலில், ஒவ்வொரு சமூகத்தையும் உதவி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளது.

இந்தத் தருணம் அரசியலைப் பற்றியதல்ல, மக்களைப் பற்றியது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )