
நீர் சுத்திகரிப்புக்காக 25,000 கிலோகிராம் குளோரினை வழங்கிய யுனிசெஃப்
நாடு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் கிராமப்புற சமூகங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை மீட்டெடுப்பதற்கான
நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
நீர் சுத்திகரிப்புக்காக சுமார் 25,000 கிலோகிராம் குளோரினை யுனிசெஃப் வழங்கியுள்ளது.
இந்த உதவி இது 500,000 குடும்பங்களுக்கு போதுமானது என தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சுத்தமான நீரை மீண்டும் பெறவும், நீர்வழி நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு சேதத்தால் பாதுகாப்பற்ற நீர் ஆதாரங்களுக்கு ஆளாகக்கூடிய கிராமப்புறங்களில் குளோரின் விநியோகிக்கப்படும் என கூறப்படுகின்றது.
அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படும் யுனிசெஃப், பாதுகாப்பான நீர் அணுகலை விரிவுபடுத்துவதற்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் உதவி புரிகிறது.
