திருகோணமலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

திருகோணமலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் அடையாளந்தெரியாதவர்கால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரே துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சீனன்குடா – 5 ஆம் கட்டை பகுதியைச் சேரந்த 59 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து சீனன்குடா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )