அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுக்கும் அபாயம் – உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுக்கும் அபாயம் – உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர்வடைந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அணை மற்றும் மாலபே – கடுவலை பிரதான வீதிக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CATEGORIES
Share This