
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி காரணமாக, பல இடங்களில் மண்சரிவுஏற்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்த்தேக்கத்திற்குக் கீழ் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு
நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
