அம்பிட்டிய தேரரின் இனவாத கருத்து – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அம்பிட்டிய தேரரின் இனவாத கருத்து – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ICCPR சட்டத்தின் கீழ் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே 2023/10/23 அன்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது சுமனரத்த தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக கஹந்தகமகே தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்கள் வெட்டிக் கொல்ல வேண்டும் என அம்பிட்டிய சுமனரத்த சுமணரத்ன தேரர் கூறியது தொடர்பில் அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )