தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது – விஜய்

தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது – விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை தற்குறி என்கிறார்கள், அவர்கள் தற்குறிகள் கிடையாது, தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த மக்களுடன் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் குறிப்பிட்ட அளவான ஆதரவாளர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் பேசிய விஜய், தான் ஆட்சிக்கு வந்த பின்னர்  அனைவருக்கும் நிரந்தரமான வீடு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும், அதற்குண்டான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும், அரச வைத்தியசாலைகளுக்கு பொது மக்கள் அச்சமின்றி செல்லும் நிலைமைமை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை எப்படி செயல்படுத்த உள்ளோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரிவிப்போம் என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This