ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசை!! 46 ஆண்டுகளின் பின் முதலிடம் பிடித்த நியூசிலாந்து வீரர்

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார்.
1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னருக்குப் பின்னர் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார்.
கிறைஸ்ட்சர்ச்சில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் முடிந்த பின்னர் 22 நாட்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
46 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் க்ளென் டர்ன முதலிடம் பிடித்திருந்தார்.
அதன் பின்னர் அந்த அணி சார்பில் நாதன் ஆஸ்டில், ரோஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடி இருந்தாலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை.
தற்போது டேரில் மிட்செல் முலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் தற்போதைய தலைவர் சுப்மன் கில் நான்காவது இடத்திலும், விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரஷித கான் 710 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இலங்கையின் மகீஷ் தீக்சன நான்காம் இடத்த பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
