வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு

வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் குறித்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா, 2015 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், வழக்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகளால் பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This