வவுனியா மற்றும் கிரிபத்கொடையில் ஆயுதங்கள் மீட்பு – விசாரணையில் வெளியான தகவல்

வவுனியா மற்றும் கிரிபத்கொ உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் “பிரவீன்” என்ற ஒரு நபருக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். சந்தேக நபர் “பிரவீன்” தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று திட்டமிட்ட குற்றவாளிகள், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது “பிரவீன்” தொடர்பான தகவல்கள் வெளியாகின.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான சம்பவங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
