பொலிஸார் அதிரடி சோதனை!! மண்டியிட்டு அழுத சந்தேகநபர்

தனமல்வில மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரை நபரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வெல்லவாய நீதவான் நீதிமன்றம் நேற்று (01) உத்தரவிட்டது.
சந்தேக நபர் குறித்து தனமல்வில பிரிவு புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனமல்வில தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சந்தேக நபரின் வீட்டை ஆய்வு செய்தனர்.
இதன்போது, சந்தேக நபரின் வசம் இருந்த விநியோகத்திற்காக தயாரிக்கப்பட்ட 06 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களை பொலிஸ் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தலுக்காக சந்தேக நபர் பல முறை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர் பொலிஸாரிடம் மண்டியிட்டு அழுது புலம்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
