பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!!

பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!!

அவுஸ்திரேலியாவில் பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பென் ஆஸ்டின் என்ற வீரரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஆஸ்டின் மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெ கழகத்திற்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில், கடந்த வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தில் (Automatic Bowling Machine) இருந்து வந்த பந்து, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்துப் பகுதியில் தாக்கியது.

அவர் தலைகவசம் அணிந்திருந்த போதிலும் இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக்கொண்டார்.

பந்து தாக்கியதில் நிலைகுலைந்து போன அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் மோனாஷ் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பென் ஆஸ்டின் உயிரிழந்ததாக ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கழகம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸின் மரணத்தை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் நடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது, வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது. அதனால் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் வீரர்களின் பாதுகாப்பு குறித்த பல புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், தற்போது பென் ஆஸ்டினின் மரணமும் அதே போன்ற ஒரு பகுதியில் பந்து தாக்கியதால் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share This