இங்கிலாந்தில் இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்

இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்

வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இன வெறி காரணமாக குறித்த இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் 30 வயதுடைய வெள்ளையர் எனவும், குறுகிய முடி மற்றும் கருநிற ஆடைகள் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இளம் பெண் மீதான மிகவும் கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக  விசாரணை அதிகாரி  தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share This