லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியில் வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
