மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை  கைது செய்யபட்டார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

Share This