வங்காள விரிகுடா கடல் உருவாகும் மொன்தா சூறாவளி

வங்காள விரிகுடா கடல் உருவாகும் மொன்தா சூறாவளி

எதிர் வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் சூறா வழியாக) வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Thailand நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட மொன்தா (Montha – Pronounce as Mon-Tha) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.

இது வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராவில் பிரதேசத்திற்கு இடையில் ஊடறுத்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை இது நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பாதையானது நமது பிரதேசத்தில் இருந்து சற்று தூரமாக காணப்படுவதனால் இந்த சூறாவளியின் காற்று தாக்கங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது

Share This