கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்

கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட நாளில் தான் நீதிமன்றத்திற்கு வந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் தன்னை சட்டத்தரணியாக எண்ணி வழக்கு ஒன்றை ஒப்படைக்க முயற்சித்தாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ கொலையின் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, பொலிஸ் விசாரணையின் போது தன்னை வழக்கு ஒன்றில் பேச அழைக்கப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவை, சுட கமாண்டோ சாலிந்துவுடன் நான் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ​​சட்டத்தரணிகளுக்கான ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் தங்கியிருந்தேன்.

அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார். நான் ஒரு சட்டத்தரணி என்று நினைத்து அந்த பெண் என்னிடம் பேசினார்.

அந்தப் பெண்ணின் கணவர் அவரை மிக மோசமாக தாக்கியுள்ளார். அது குறித்த வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளது.

அந்த பெண் என்னிடம் வந்து, “மேடம், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஆயிரம் ரூபாய்தான் என்னிடம் உள்ளது, இதை வாங்கிக்கொண்டு என் வழக்கை பேசுவீர்களா?” என்று கேட்டார்.

அப்போது அந்தப் பெண் மீது எனக்கு மிகவும் கரிசனை ஏற்பட்டது.

நான் வேறொரு வழக்கைப் பற்றிப் பேச வந்திருப்பதாகச் சொன்னேன். அதனால், வழக்கை அங்கே இருக்கும் மற்றுமொரு சட்டத்தரணியிடம் வழங்குமாறு சொன்னேன்.

என்னிடம் இருந்து சென்ற அந்த பெண், மற்றைய சட்டத்தரணியிடம் தனது கதையை சொன்னார். ஆனால், வழக்கில் முன்னிலையாக சட்டத்தரணி 2000 ரூபாய் கோரியிருந்தார்.

அந்தப் பெண் மிகவும் உதவியற்றவராக இருந்தார். உடனே, நான் அவரை அறைக்கு வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயைக் கொடுத்து, மற்றைய சட்டத்தரணி மூலம் வழக்கை பேசச் சொன்னேன்.

அந்த பெண் என் கைகளைப் பிடித்து, வணங்கி, பணத்தை பெற்றுக்கொண்டார்” என இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

Share This