மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – விசேட அறிவிப்பு

இந்த வருடத்திற்கான மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்போதைய மின் கட்டணத்தையே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இலங்கை மின்சார சபையானது ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டிற்காக 6.8 சதவீத மின் கட்டண அதிகரிப்பை முன்மொழிந்திருந்தது.
இந்த முன்மொழிவு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறும் செயல்முறை நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளது.