பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்தார்.

ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கசிப்பு மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This