கொழும்பில் ஊடகவியல் கருத்தரங்கு

கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், (Tamil Media Alliance -TMA) கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சென்ற 11 ஆம் திகதி சனிக்கிழமை ஊடகவியல் கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தது.
வடக்கு, கிழக்கு செய்தியாளர்கள் பிரதான ஊடகங்களின் (Staff Journalist)அலுவலக செய்தியாளர்கள் இக் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தனர்.
கருத்தரங்கை பத்திரிக்கையாளர் அ.நிக்ஸன் நெறிப்படுத்தியிருந்தார்.
மூத்த பத்திரிகையாளரும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியுமான, பேராசிரியர் எஸ். ரகுராம் ‘ஒருங்கிணைந்த ஊடகவியல் (Integrated Journalism) என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்.
அத்துடன், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ChatGPT பயன்பாடுகள், ஊடகவியலில் உண்மைப் பிரதிகள் மாறுபடாத, நம்பகத்தன்மை (Credibility) உறுதிப்படுத்தக் கூடிய முறைமைகள் குறித்து விளக்கமளித்தார்.
சட்டத்தரணி பெனிஸ்லஸ் AI சட்டத் தன்மைக்கு உட்படும் முறைமை, ஊடகவியலில் அதனைப் பயன்படுத்தும் போது கையாளக்கூடிய சட்டத் தன்மை வாய்ந்த மற்றும் இயல்பான தன்மைக்கு மாறான அடையாளங்களை மாற்றுவதால் எழக்கூடிய விளைவுகள் பற்றி விளக்கமளித்தார்.
மூத்த பத்திரிகையாளர் அருண் ஆரோக்கியநாதன் ‘சூம்’ (Zoom) செயலி மூலம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கட்டுரைகள் எழுதும்போது AI பயன்பாடு பற்றி சிறிய உரையாற்றினார்.
செய்தியாளர்களின் கேள்விகள் – சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டன.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எஸ்.ஸ்ரீகஜன், தினக்குரல் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரும் செயலாளருமான கே. ஜெயந்திரன், மூத்த பத்திரிகையாளர் அனந் பாலகிட்னர் ஆகியோர் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தனர்.
மதிய நேர உணவுடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது. இது போன்ற மேலும் சில கருத்தரங்குகள் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் முன்னெடுப்படும் என செயலாளர் ஜெயந்திரன் தெரிவித்தார்.