சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல்

சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல்

சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மோட்டர் போக்குவரத்துத் துறைக்குத் தெரியாமல் சுமார் 28 ஆண்டுகளாக அதே குழு சாரதி உரிமத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக நிதி துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் பெரிளவில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தைப் பயன்படுத்தி இதற்கு தீர்வு காண முயன்றார்.
ஆனால் அது இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, இதனை நிறுத்தி புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வு காண
நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சாரதி உரிமம் அச்சிடும் இயந்திரங்களை நிறுவும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

அரசாங்கத்திடம் தற்போது 800,000 சாரதி உரிம அட்டைகள் உள்ளது. ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.

தற்போதுள்ள அட்டைகள் முடிவடைவதற்கு முன்னர் மேலும் 01 மில்லியன் அட்டைகளை முன்பதிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய அட்டைகள் மோட்டார் போக்குவரத்துத் துறை மூலம் அரசாங்கத்தால் அச்சிடப்படும் , இதன் மூலம் அச்சிடும் போது அட்டையொன்றுக்கு 167 ரூபா சேமிக்க முடியும்” என்றார்.

Share This