சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இணையத்தில் இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் குறித்து தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை ஏனையோருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் எனவும்
பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் வங்கிக் கணக்கு எண்கள், பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் QR குறியீடுகள் உள்ளிட்ட இரகசிய விபரங்களை பெற்றுக்கொள்ள போலியாக ஒன்லைன் வேலை வாய்ப்புகளை வழங்குதல் அல்லது விரைவான நிதி ஆதாயங்களை உறுதியளித்தல் போன்ற பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோசடியாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் செயற்படுவதால் அவர்களை அடையாளம் காண்பது இலகுவான விடயமல்ல என்றும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This