மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்

மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.

தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, மகிந்த ராஜபக்ச ஒரு சகாப்தத்தை உருவாக்கிய தலைவர் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறினார்.

கடந்த மாதம் 11ஆம் திகதி கொழும்பில் இருந்து தங்காலைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவை அரசியல்வாதிகளும், பொது மக்களும் நேரில் சந்தித்து நலன் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share This