மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்

மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்

மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

குருநாகல் பகுதியிலிருந்து திம்புலாகல நோக்கி பயணித்த வேன் கொழும்பு நோக்கி மண் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் ஹிங்குரக்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேனின் சாரதிக்கு தூக்கம் ஏற்ப்பட்டமையே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This