உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

நிட்டம்புவ – உதம்மிட்ட பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவத் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த வாகனத்தில் பயணித்த மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கம்பஹா – பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் ஆய்வாளர் உட்பட அதிகாரிகள் குழு நிட்டம்புவ-கட்டுநாயக்க சாலையில் உள்ள உதம்மித சந்தி சாலையில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வேயங்கொடையிலிருந்து நிட்டம்புவ நோக்கி வான் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்தது.
வானை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சைகை செய்தபோது, வான் நிறுத்தாமல் சென்றது. இதனையடுத்து குறித்து வானை துரதை்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலம், வானில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வானின் சாரதி லெல்லோபிட்டியவைச் சேர்ந்தவர் என்றும், ஏனையவர்கள் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.