இலங்கையின் மிக வயதான மனிதர் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையின் மிக வயதான மனிதர் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையின் மிக வயதான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தின் கரந்தெனியாவைச் சேர்ந்த பொல்லந்த ஹகுரு மெனியல் (வயது 110) என்பர் இலங்கையின் மிக வயதான மனிதராக தேசிய முதியோர் செயலகத்தால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

அவரது பழைய தேசிய அடையாள அட்டையின்படி, மெனியல் 1915 ஜூன் 4 ஆம் திகதி கரந்தெனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அங்குலுகல்ல கிராம நிலாதாரி பிரிவில் பிறந்தவர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் தனது முழு வாழ்க்கையையும் இப்பகுதியில் கழித்து, விவசாயம், கறுவா பயிரிடல் மற்றும் கிராம சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

110 வயதிலும் மெனியல் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் மற்றும் 5ஆம் தரம் வரை கல்வி கற்ற அவர். இன்னும் எழுதவும் படிக்கவும் முடியும். அவரது நீண்ட ஆயுளுக்கு எளிமையான வாழ்க்கை முறை மற்றும் நச்சுத்தன்மையற்ற உணவுப் பழக்கமே காரணம் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கிராமத்தில் நடைபெறும் பிரித் நிகழ்வுகளில் 75 வயது வரை தவறாமல் பங்கேற்று, மத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர் என உள்ளூர் மக்களால் அறியப்படுகிறார்.

மெனியல் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார் மற்றும் தனது பரந்த குடும்பத்தினரின் அன்பைப் பெற்று வாழ்கிறார். மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி அண்மையில் அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து, பரிசுப் பொருட்களை வழங்கி அவரது நலனை விசாரித்தார்.

அரசாங்கத்தின் நூற்றாண்டு முதியோர் உதவித்தொகையைப் பெறும் மெனியல், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நினைவுகளையும் பாரம்பரியங்களையும் தாங்கிய காலி மாவட்டத்தின் பெருமைமிக்க அடையாளமாக விளங்குகிறார்.

Share This