அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை

அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை

அநுராதபுரம் – எப்பாவல பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டது.

இந்த யானைக் குட்டி நான்கு அடி நீளமுள்ள ஒரு சிறிய யானைக் குட்டியாகும்.

யானைக் குட்டியின் முன் காலில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காயம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகிய நிலையில் காயம் ஏற்பட்ட இடத்தில் சீழ் நிரம்பியிருந்தது.

காயம் காரணமாக, யானைக் குட்டி சரியாக நடக்க முடியவில்லை, உணவு மற்றும் தண்ணீரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையல், வனவிலங்கு கால்நடை பிரிவு அதிகாரிகளின் நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் யானை மீட்கப்பட்டு காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யானையின் உடல்நிலை தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This