மாவனெல்லையில் மண் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனெல்லையில் மண் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனெல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதைந்திருந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று (29) காலை சுவர் கட்டும் தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்தது.

அதன்படி, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This