இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர் 04 சுற்றில் மோதி இருந்தன.
இந்த 02 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.