போரை நிறுத்த கோரி இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது – படால் கெலாட்

போரை நிறுத்த கோரி இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது – படால் கெலாட்

பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்க முயற்சிப்பதாக ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”பாகிஸ்தான் தோல்வியை வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தானின் விமானத் தளங்கள் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டின் இராணுவம் இந்தியாவிடம் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது.

அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்த விமான நிலையங்கள் பாகிஸ்தானுக்கு வெற்றியைப் போலத் தோன்றினால், பாகிஸ்தான் அதை அனுபவிக்க வரவேற்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்களைக் கொன்ற ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ தீவிரவாத அமைப்பை பாதுகாக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி எடுத்ததை நினைவு படுத்துகிறோம்.பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் ஒரு பங்காளியாக இருப்பதாகக் கூறிக் கொண்டு, 10 ஆண்டு காலமாக ஒசாமா பின்லேடனுக்கு அது எவ்வாறு அடைக்கலம் கொடுத்தது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். அதில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை. பாகிஸ்தான் முதலில் பயங்கரவாத முகாம்களை மூடிவிட்டு, தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்

Share This