இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் சாத்தியம்

இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் இலேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இந்நிலையில், பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This