இலங்கையில் நேற்று அதிரடி சோதனை – 1000 பேர் வரை கைது

இலங்கையில் நேற்று அதிரடி சோதனை – 1000 பேர் வரை கைது

நாடு முழுவதும் நேற்று (24)  நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின் விளைவாக குற்றவியல், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 1,006 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பாரிய சோதனையில் மொத்தம் 28,669 பேர் சோதனை செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 31 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் பிடியாணை பிறபிக்கக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 601 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து மீறல்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 63 சாரதிகளும் பொறுப்பற்ற வகையில் வாகனத்தை செலுத்திய 20 சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

கூடுதலாக, பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 4,364 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த நடவடிக்கைகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முயற்சி என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share This