மனுஷ நாணயக்காரவை வாக்குமூலம் வழங்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரை நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பியது தொடர்பாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அப்போதைய தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த எட்டாம் திகதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார். எனினும், அந்த நேரத்தில், மனுஷ நாணயக்கார வெளிநாட்டில் இருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று துபாயில் இருந்து வந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விமான நிலையத்தில் அவருக்கான அழைப்பு கடிதத்தை வழங்கியது.
அதன்படி, நாளை (26) காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.