விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான
குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து 03 போதைப்பொருள் பொதிகளை 36 வயதான இந்தியப் பிரஜை
நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.