மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு

மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் மிகவும் பொருத்தமான வீடு ஒன்றை தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறப்பு குழு ஒன்று தற்போது பொருத்தமான வீட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரமுகர்கள் சந்திக்க வருவதால், பொருத்தமான சூழலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான சாலை வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பதே எதிர்பார்ப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மிக விரைவில் பொருத்தமான வீடு தெரிவுசெய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடித்த மகிந்த ராஜபக்ச தற்போதை ஆட்சியாளர்களின் முடிவின்படி, கொழும்பில் இருந்து தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுளளார்.

உயிர் அச்சுறுத்தல் உள்ள போதிலும் அவர் தங்காலைக்கு சென்றுள்ளார்.

அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இந்நிலையில், தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரித்ததாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் தங்காலை வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூவம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் ஆட்சியில் இருந்த போதிலும், ஆட்சியில் இல்லாத போதிலும் மக்களுன் என்னுடன் இருக்கின்றனர். சிறு குழந்தைகளின் உரையாடல் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

இந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது. நான் அதனை ரசித்து கேட்கின்றேன்.

இந்நிலையில், எனது நலனை விசாரிக்க வந்த அன்பான மக்கள், அரசியல் சகாக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னான் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனையடுத்து அரச வீடுகளில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் வீடுகளை மீளவும் அரசாங்கத்திடம் கையளிக்க நேர்ந்தது.

இதன்படி, கொழும்பு விஜேராம மாவத்தையில் அரச வீட்டில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச, கடந்த 11ஆம் திகதி அங்கிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் குடியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This