வர்த்தக போர் – இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை

பொருளாதார மற்றும் வர்த்தக நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் திங்கட்கிழமை மீண்டும் கூடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சகத்தைக் கொண்ட சாண்டா குரூஸ் அரண்மனையில் முதல் நாள் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் (MOC) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச கட்டண நடவடிக்கைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் டிக்டாக உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதிப்பார்கள் என்றார்.
சீனக் குழுவிற்கு சீன துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் தலைமை தாங்குகிறார், அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அரசியல் குழுவின் உறுப்பினரும் ஆவார்.
டிக்டாக் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் நிலையானது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீனா தனது நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது எனவும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி டிக்டாக் பிரச்சினையைக் கையாளும் என்றார்