ஜனாதிபதி, இந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி, இந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்கு வியஜம் மேற்கொள்கிறார்.

தனது பயணத்தின் போது, ​​பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்
என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தனது பணிகளை நிறைவு செய்த பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம், ஜனாதிபதி எதிர்வரும் 26 ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

ஜப்பானில், இந்த மாதம் 27 ஆம் திகதி உலக கண்காட்சி சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு, மூத்த ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This