ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு – புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்

ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு – புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன.

நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் புது டில்லிக்கு அறிக்கை அளிக்க உள்ளார் என்றும் அறியப்படுகிறது.

Share This