ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானுடன் போட்டியில் ஈடுபட இந்தியாவில் கடும் எதிர்ப்பு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானுடன் போட்டியில் ஈடுபட இந்தியாவில் கடும் எதிர்ப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06 வது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

டுபாயில் இடம்பெறவுள்ள இந்த போட்டிஇலங்கை நேரப்படி இரவு 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிராக இறுதியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளில் இந்தியா 13 போட்டிகளிலும்
பாகிஸ்தான் 03 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவில்
மேலும் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்த போட்டி இரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாகிஸ்தானுடன் இந்தியா, கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Share This