மகிந்த மீதான அளவு கடந்த அன்பு – தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தம்பதியினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் உந்துருளியில் பயணம் செய்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து பின்னர் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது .
மகிந்த ராஜபக்சவின் மீதான அன்பின் காரணமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் நோக்கில் அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தை தொடர்ந்து அரச வீடுகளில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் வெளியேறியிருந்தனர்.
இதன்படி, கொழும்பில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச கடந்த 11ஆம் திகதி தனது சொந்த ஊரான தங்காலைக்கு சென்றார்.
இந்நிலையில், தங்காலை வீட்டில் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சவை பொது மக்கள் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தமது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே, கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர், மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து தமது அன்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆசியும் பெற்றுக்கொண்னர்.