ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை?

ரஷ்யா – கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை
நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வு 7.4 ரிக்டர் அளவில் பதிவானதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 39.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள சில ரஷ்ய கடற்கரைகளில் ஒரு மீற்றர் (3.3 அடி) வரை ஆபத்தான அலைகள் ஏற்பட கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது
பின்னர் சுனாமி அச்சுறுத்தல் இல்லயென பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.