கேரள மருத்துவமனை கழிவுகள் விவகாரம்….தமிழ்நாடு அரசின் உத்தரவு
கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அக் கழிவுகளில் பஞ்சுகள், குளுக்கோஸ் போத்தல்கள், மருத்துவமனை அனுமதிச் சீட்டுகள், இரத்தக் கசிவுகள் போன்றவை அடங்கும்.
இந்நிலையில் கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்த கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும் இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுகளுக்கு கேரள அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.