கொழும்பில் கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்

கொழும்பில் கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்

கொழும்பு – கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்று (7) கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், கடலில் விழுந்த தாய் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவருடன் ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண் தனது குழந்தையுடன் வெலிமடைப் பகுதியிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் நுவரெலியா பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண், குழந்தையுடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றாரா அல்லது அந்தப் பெண் தனது குழந்தையை கடலில் வீசிவிட்டாரா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This