பின் வரிசையில் அமர்ந்திருந்த மோடி – வைரலாகும் புகைப்படம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது பின் வரிசையில் அமர்ந்திருப்பதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
ரவி கிஷன் எம்.பி இன்று வெளியிட்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) எம்.பி.க்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்தப் பயிலரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயிலரங்கு நடைபெறும் போது பின் வரிசையில் அமர்ந்தார்.
இது குறித்து கோரக்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறுகையில், பிரதமர் மோடி பின் வரிசையில் அமர்ந்திருப்பது கட்சியின் பலத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கில், ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களுக்காக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும் கௌரவித்தனர்.
பாஜகவின் இந்த இரண்டு நாள் பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7, 2025) தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.