எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் சுற்றுலா சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This