
ஜம்மு – காஷ்மீரில் மண்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் மண்சரிவு காரணமாக வீடு இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
மண்சரிவு மற்றும் பலத்தமழை காரணமாக ஜம்மு – காஷ்மீரில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பை தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 03 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது.
இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் மண்ணுக்குள் புதைந்தனர். ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பலத்த மழை காரணமக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இந்தியா
