உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், உக்ரைன் போர் குறித்து ரஷ்ய ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் கருத்து தெரிவிக்கையில்,
“உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர இருக்கிறார். ஜெலென்ஸ்கியின் பயணத் திகதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது போர் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள். உக்ரைன் ஜனாதிபதியின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்.” என்றார்.