ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் – சந்திரிக்கா

ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் – சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை நமது நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலையை ஏற்படுத்துகிறதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல, கொழும்பில் நடைபெறும்  ஊடக சந்திப்பில் சந்திரிகாவின் அறிக்கையை வாசித்தார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“நமது ஜனநாயக விழுமியங்களின் சாராம்சத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை நாம் காண்கிறோம்.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் குழுவின் தலைவிதியையும் தாண்டிச் சென்று, ஒட்டுமொத்தமாக நமது சமூகத்தின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Share This