பற்றியெரிந்த வீடு…ஆறு பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர், கத்துவா மாவட்டம், சிவா நகரில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் வரையில் சிக்கி கொண்டுள்ளனர்.
அவர்களுள் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதில் காயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துக் கல்லூரிக்கு கொண்டு செல்லலப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.