ரணிலின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வரை மின்சாரம் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரம் ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பு மாலை 5.30 அளவில் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.